ஒரத்தநாடு அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: கணவன்-மனைவிக்கு வலைவீச்சு

ஒரத்தநாடு அருகே முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன், மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலை மிரட்டல்
கொலை மிரட்டல்
Published on

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்தவர் பாபு. இவர் கோவையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாமரைச்செல்வி(வயது38) தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பாபுவின் சித்தப்பா இளங்கிள்ளி குடும்பத்துக்கும். பாபுவின் குடும்பத்துக்கும் வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தாமரைச்செல்வி குழந்தைகளுடன் தனியே இருந்துள்ளார். அப்போது இளங்கிள்ளியின் மகன் ராஜராஜன்(45), இவரது மனைவி வினோதினி(40) ஆகிய இருவரும் அங்கு வந்து தாமரைச்செல்வியுடன் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த தாமரைச்செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதுபற்றி தாமரைச்செல்வி ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜராஜன், அவரது மனைவி வினோதினி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com