பண்ருட்டி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்- தந்தை-மகன் கைது

மரத்தை வெட்டிய தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
பண்ருட்டி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்- தந்தை-மகன் கைது
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சின்ன சேமகோட்டை பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 62), விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முத்து (51).

கலியன் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்காக சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது முத்துவீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தை வெட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் கலியன் மனைவி சின்னபாப்பா (60) என்பவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து, அவரது மகன் ராமராஜன் (27), அவரது மனைவி தைலம்மாள் (25) ஆகியோர் எப்படி எங்கள் மரத்தை வெட்டலாம் என்று கூறி சின்னபாப்பாவிடம் தகராறு செய்தனர். 

பின்பு அவரை ஆபாசமாக பேசி உருட்டுகட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த சின்னபாப்பா கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து சின்னபாப்பா புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து பெண்ணை தாக்கிய முத்து அவரது மகன் ராமராஜன் ஆகியோரை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com