முதலியார்பேட்டையில் பெண்ணை தாக்கி மானபங்கம்- 3 பேருக்கு வலைவீச்சு

முதலியார்பேட்டையில் பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண் மானபங்கம்
பெண் மானபங்கம்
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை அவ்வைநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 41). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இவரது கணவர் சிவசக்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகள்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பிரபாவதி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு பிரபாவதி தனது மகள்களுடன் வீட்டில் இருந்தார். அப்போது லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த உதயகுமார் என்பவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் பிரபாவதியின் வீட்டுக்கு வந்தார்.

அப்போது பிரபாவதியை தகாத வார்த்தைகளால் திட்டிய உதயகுமார் உனது மகளை என்னுடன் அனுப்ப மாட்டாயா? என்று கூறி சரமாரியாக தாக்கினார்.

மேலும் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததோடு பிரபாவதியின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தார். பின்னர் உதயகுமார் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த பிரபாவதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்குபதிவு செய்து உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com