

ராயபுரம்:
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெண் ஒருவர் போலி நகை கொடுத்து மோசடி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திக்கு வந்த ஒரு பெண் தனது பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தன்னிடம் உள்ள தங்க நாணயத்துக்கு யாராவது பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றும் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரித்த போது அந்த பெண்ணிடம் இருந்தது போலியான தங்க நாணயம் என்பதும், அவர் பெயர் பிரியா (22). ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மீது போலி நகை மோசடி தொடர்பான பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பிரியாவை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடக்கிறது.