ஒடிசா: செல்பி மோகத்தால் ஆற்றில் மூழ்கி தாய், மகன் பலி

ஒடிசா மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்ற போது தாய், மகன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா: செல்பி மோகத்தால் ஆற்றில் மூழ்கி தாய், மகன் பலி
Published on

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் அப்பகுதியில் உள்ள நாகவளி ஆற்றிற்கு நேற்று மாலை தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்குள்ள பாலத்தின் மீது நின்று தனது மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து செல்பி எடுத்தார். பின்னர் பாலத்தின் கீழ் உள்ள பாறைகளின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற போது மூவரும் தவறி ஆற்றில் விழுந்தனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நீரில் விழுந்த மூவரில் சிறுமியை காப்பாற்றினர். சாந்தி மற்றும் அவரின் ஐந்து வயது மகன் அகில் நீரில் மூழ்கினர். சாந்தியின் உடல் நேற்று மீட்கப்பட்டது. சிறுவனின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியது.

செல்பி எடுக்கும் மோகத்தால் ஆற்றில் மூழ்கி தாயும், மகனும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com