விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் 3-வது சுற்றின் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ரபேல் நடால், வீனஸ் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி
Published on

லண்டன்:

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், லண்டன் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று போட்டியில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெனின் ரபேல் நடாலும் ரஷ்யாவின் கசனோவும் மோதினர். இப்போட்டியில், நடால் 6-1, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் கசனோவை எளிதாக வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நடால் அடுத்த சுற்றில் லக்செம்பெர்க்கின் முல்லரை எதிர்கொள்ள உள்ளார். 

இப்பிரிவில் நடைபெற்ற மற்ற போட்டிகளில் முன்னணி வீரர்களான சிலிக், முர்ரே ஆகியோர் வெற்றி பெற்று அடுத்தசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 9-வது நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி, ஸ்பெனின் படிஸ்டா அகட்டிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பத்தாம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், ஜப்பானின் ஒசாகாவை எதிர்கொண்டார். இரண்டு சுற்றுகளே நடைபெற்ற போட்டியில் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இவர் 4-வது சுற்று போட்டியில் குரோஷியாவின் கோன்ஜூவுடன் மோத உள்ளார். கோன்ஜூ 3-வது சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையான சிபுல்கோவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தவிர, பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகளான கோண்டா, ஸ்விடோலினா, ஹலிப் மற்றும் வோஸ்னியாக்கி ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.

இன்றும் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று நடைபெறும் போட்டிகளில் பெடரர், ஜோகோவிச், மோன்பில்ஸ், டோம்னிக் டேய்ம் ஆகியோர் விளையாட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com