சீனாவின் 59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு

சீனாவின டிக்-டாக் உள்பட 59 செயலிகளுக்கு இந்தியா தடைவித்தள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ
Published on

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடைவிதித்தது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை கொண்ட செல்போன்களில் பயன்படுத்தப்படும் சில செயலிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. குறிப்பாக பயனாளர்களின் தரவுகளை திருடி இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அதன் மைய அமைப்புகளுக்கு (சர்வர்) அனுப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு திருடப்படும் தகவல் தொகுப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைகிறது. இது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கிறது. இது உடனடியாக சரி செய்ய வேண்டிய விவகாரம் என்பதால் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.

மேலும் தீங்கிழைக்கும் இந்த செயலிகளை தடை செய்யுமாறு இந்திய சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், இந்த செயலிகளால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவதாக சமீபத்தில் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இந்த செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி செல்போன் மற்றும் செல்போன் அல்லாத பிற இணைய பயன்பாட்டு கருவிகளிலும் இந்த செயலிகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இந்திய சைபர் வெளியில் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த நடவடிக்கை, கோடிக்கணக்கான இந்திய செல்போன் மற்றும் இணையதள பயனாளர்களை பாதுகாக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்தியாவின் நடவடிக்கை கவலை அளிப்பதாக இந்தியாவுக்கான சீன தூதர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்தியாவின் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சீனா அரசின் கண்காணிப்புக்கு ஒரு இணைப்பாக செயல்படும் குறிப்பிட்ட செயலிகளுக்கு இந்தியா  தடைவித்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.

இது இந்தியாவின் இறையாண்மையை ஊக்குவிப்பதாக இருக்கும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் தேசிய பாதுபாப்புதையும் ஊக்குவிப்பதாக இருக்கும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com