

உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் குவித்தது.
எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன.
சூப்பர் ஓவரும் டிராவானதால் பவுண்டரிகள் கணக்கிடப்பட்டன. இதில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியைவிட அதிக பவுண்டரிகள் எடுத்திருந்ததால் உலக கோப்பையை கைப்பற்றியது.
கடைசி ஓவரில், பென் ஸ்டோக்ஸ் போல்ட்டின் பந்தை அடித்து, இரண்டாவது ரன்னுக்கு ஓடும்போது, தாவி கிரீசில் விழுந்தார். மார்டின் குப்தில் வீசிய பந்து பேட்டில் பட்டு மீண்டும் பவுண்டரிக்கு சென்றது.
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியது மிகச்சிறப்பான போட்டியாக அமைந்தது. நான் என் வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.