ராஜபாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா? தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் பதில்

Published on

ராஜபாளையம், ஜன.15-

ராஜபாளையம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க சட்டமன்றத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கேள்வி கேட்டார். அவர் பேசுகையில் ராஜ பாளையம் மிகப் பெரிய நகரமாகும். சுமார் 1 லட்சத்து 77 ஆயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

பஞ்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் உள்ளன.அங்கு குறைந்த மின்ன ழுத்தம் உள்ளதால் ராஜ பாளையத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அங்கு ஒரு 110 கே.வி. துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்று கேட்டனர்.

இதற்கு அமைச்சர் தங்க மணி பதில் அளிக்கையில், ராஜபாளையம் பகுதி வளர்ந்த பகுதி. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இதுவரை எங்களுக்கு அங்கு குறைந்த மின் அழுத்தம் இருக்கிறது என்ற புகார்கள் வரவில்லை.

ஏற்கனவே அம்மா அவர்கள் அறிவித்த 765 துணை மின் நிலையங்களில் ஒன்று விருதுநகரில் அமைய இருக்கிறது.

அப்போது இதற்கு உண்டான இடத்தை தேர்வு செய்து அதிகாரிகளோடு ஆய்வு செய்து தேவையிருப்பின் அங்கு 110 கே.வி. துணை மின் நிலையம் அமைப்பதற்கு உண்டான நடவடிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com