தஞ்சையில் மனைவி திட்டியதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

தஞ்சையில் குடும்ப தகராறில் மனைவி திட்டியதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சையில் மனைவி திட்டியதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35) டிரைவர். இவரது மனைவி தேன்மொழி(33). இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் தேன்மொழி ஆத்திரம் அடைந்து சதீஷ்குமாரை திட்டினார். இதில் சதீஷ்குமார் மனமுடைந்தார். விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். 

பின்னர் ஒரு பெட்ரோல் பங்க் அருகே நின்று விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தேன்மொழி தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com