நெட்டப்பாக்கத்தில் வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை

நெட்டப்பாக்கத்தில் வேலைக்கு செல்லாத கணவரை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கத்தில் வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை
Published on

சேதராப்பட்டு:

மடுகரை இந்திராநகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவர் நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மனைவி வாசுகியை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அவர் சிகிச்சை முடியும் முன்பே வீடு திரும்பினார். அப்போது கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை வாசுகி கண்டித்தார்.

இதனால் மனவேதனை அடைந்த மதியழகன் சோகத்துடன் டெய்லர் கடைக்கு சென்றார். இதனால் சந்தேகமடைந்த வாசுகி, கணவர் சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து டெய்லர் கடைக்கு சென்று பார்த்தார்.

அப்போது கடையில் மதியழகன் தனது வேட்டியால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதேபோல் நெட்டப்பாக்கம் லட்சுமி நகர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 38). லாரி டிரைவர். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மகேஸ்வரி கூலி வேலை செய்து வந்தார்.

ராஜாமணிக்கு குடிப்பழக்கம் உண்டு. சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மனைவி மகேஸ்வரி கண்டித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த ராஜாமணி அங்கிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அனைத்தனர்.

பின்னர் அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி இறந்து போனார்.

மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com