திருபுவனை அருகே மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் கூலித்தொழிலாளி தற்கொலை

திருபுவனை அருகே மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை அருகே மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் கூலித்தொழிலாளி தற்கொலை
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே பி.எஸ். பாளையம் தோப்பு தெருவை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 42). கூலித்தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .

குடிப்பழக்கம் உள்ள மண்ணாங்கட்டி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் சுமதி குடும்பத்தை நடத்த அங்குள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

அந்த பணத்தையும் மது குடிக்க கேட்டு மண்ணாங் கட்டி அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வார். பணம் தராவிட்டால் கோபித்துக்கொண்டு வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கி விட்டு 2 நாட்களுக்கு பிறகு மண்ணாங்கட்டி வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

சம்பவத்தன்று அதுபோல் மண்ணாங்கட்டி மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால், சுமதி பணம் தாரததால் மண்ணாங்கட்டி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி மண்ணாங்கட்டியை சுமதி தேடவில்லை.

இந்த நிலையில் நேற்று பழைய வீட்டுக்கு சென்று சுமதி பொருட்கள் எடுக்க சென்ற போது, அங்கு கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com