மனைவியை அம்மிக்கல்லால் தாக்கிய கூலித்தொழிலாளி கைது

மேட்டுப்பாளையத்தில் மனைவியை அம்மிக்கல்லால் தாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

கோவை:

மேட்டுப்பாளையம் சிறுமுகை காந்தி நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 62). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாராத்தாள் என்கிற மரியம்மாள் (55). சாமிநாதனுக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இதனால் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டுக்கு குடிபோதையில் வந்த சாமிநாதன் மீண்டும் மரியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த சாமிநாதன் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து மரியம்மாள் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மரியம்மாள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து மரியம்மாள் சிறுமுகை போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com