மனைவிக்கு பாலியல் தொல்லை - நாட்டு வைத்தியரை கத்தியால் குத்திய கணவன்

ஆண்டிப்பட்டி அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் நாட்டு வைத்தியரை கத்தியால் குத்தினார்.
மனைவிக்கு பாலியல் தொல்லை - நாட்டு வைத்தியரை கத்தியால் குத்திய கணவன்
Published on

ஆண்டிப்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியை சேர்ந்தவர் மணி(வயது55). இவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கு திருமலாபுரம் பிரிவு பகுதியில் நாட்டு வைத்தியம் பார்த்து வருகிறார். தேனி பொம்மணம்பட்டியை சேர்ர்ந்தவர் சின்னராஜ்.

இவரது மனைவி மணியிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சை பார்க்கும் சாக்கில் அவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த சின்னராஜ் இளம்பெண்ணின் சகோதரர் செல்வம் ஆகியோர் மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சின்னராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயமடைந்த மணி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் சின்ராஜ், செல்வம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் மணி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com