சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தூக்கில் தொங்கிய பி.எஸ்.என்.எல். அதிகாரி

சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த பி.எஸ்.என்.எல். அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தூக்கில் தொங்கிய பி.எஸ்.என்.எல். அதிகாரி
Published on

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 51). இவர் ஏற்காடு பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மகளுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. நிர்மலா தனது மகனை அழைத்து கொண்டு மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ரவி கன்னங்குறிச்சியில் தனியாக வசித்து வந்தார்.

இதில் மனம் உடைந்த ரவி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com