நாகையில் மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

நாகையில் குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

நாகப்பட்டினம்:

காரைக்கால் அரசன் காலனியை சேர்ந்தவர் முகமது நாகு சலாம் (வயது 34 ) இவர் தனது குடும்பத்துடன் நாகை பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் கோபித்துக் கொண்டு அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 

இதனால் மனமுடைந்த முஹம்மது நாகு சலாம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com