நெட்டப்பாக்கம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் தற்கொலை

நெட்டப்பாக்கம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் தற்கொலை

நெட்டப்பாக்கம் அருகே மனைவி இறந்த வேதனையில் கட்டிட காண்டிராக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Published on

சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் தண்ணீர்தொட்டி வீதியை சேர்ந்தவர் பார்த்திபராஜ் (வயது62) கட்டிட காண்டிராக்டர். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தெய்வாணை என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெய்வாணை திடீரென இறந்து போனார். இதற்கிடையே பார்த்திபராஜ் மனவேதனைக்குள்ளானார். இதனை மறக்க பார்த்திபராஜ் குடிபழக்கத்துக்கு ஆளானார். ஆனாலும் மனைவி இறந்த வேதனையில் சோகத்துடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மதுகுடித்துவிட்டு வீடு திரும்பிய பார்த்திபராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டு வாரண்டாவில் ஊஞ்சல் கட்டும் கொக்கியில் மின்வயரால் தூக்குபோட்டு தொங்கினார்.

இன்று காலையில் பார்த்திபராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவரது மகன் பலராமன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மடுகரை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com