தம்பதி
தம்பதி

மேட்டூரில் சாவிலும் இணை பிரியாத தம்பதி

மேட்டூரில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. உறவினர்கள் 2 பேரின் உடலையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று அவரது சொந்த நிலத்தில் அடக்கம் செய்தனர்.
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.எஸ். தேசாய் நகரை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 97). நூற்பாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி குள்ளம்மாள் (87).

இவர்களுக்கு 4 மகள், 3 மகன்கள் உள்ளனர். தம்பதியர்கள் இருவரும் பாரதி நகரில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு குள்ளம்மாள் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை நேற்று மதியம் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் பச்சமுத்து அழுது கொண்டே இருந்தார். நேற்று மதியம் திடீரென அவரும் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் 2 பேரின் உடலையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று மேச்சேரி அமரத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் அடக்கம் செய்தனர்.

மேட்டூரில் சாவிலும் இணை பிரியாமல் கணவன் - மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com