கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரை ஏன்?- உ.பி. அரசுக்கு உச்சநீதின்றம் கேள்வி

உத்தர பிரதேச மாநிலம் கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கன்வர் யாத்திரை ஜூலை 25-ந்தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடைபெற இருக்கிறது. உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, இமாச்சல பிரதேசத்தில் இருந்து யாத்ரீகர்கள் ஹரித்வார் செல்வார்கள்.

உத்தரகாண்ட் அரசு கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை எச்சரிக்கை காரணத்தால், கன்வர் யாத்திரையை ரத்து செய்துள்ளது. ‘‘கடவுள் கூட மக்கள் இறப்பதை விரும்பமாட்டார். நாங்கள் இதுகுறித்து அதிகாரிகள், அருகில் உள்ள மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதன்பின் ஹரித்வார் கொரோனா தொற்றின் மையமாகிவிடக் கூடாது என்பதால் கன்வர் யாத்திரை ரத்து என்ற முடிவை எடுத்துள்ளோம்’’ என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி தெரிவித்துள்ளார்.

ஆனால் உத்தர பிரதசே மாநில அரசு கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் குறிப்பிட்ட நபர்களுடன் ஜூலை 25-ல் இருந்து கன்வர் யாத்திரை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா நெறிமுறையை முழுமையாக பின்பற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும். கன்வர் யாத்திரையின் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான செயல்பாடு குறித்து எந்த தயக்கமும் இருக்கக்கூடாது’’ எனவும் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் யாத்ரீகர்களுக்கு ஆர்-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் தேவை என்பது கட்டாயமாக்கப்படலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநில அரசுக்கு, அனுமதி கொடுத்தது குறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 3 கோடிக்கும் மேற்பட்ட சிவன் பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஹரித்வார் சென்று கங்கை ஆற்றில் நீர் எடுத்துக் கொண்டு, அவரவர் ஊரில் உள்ள சிவன் கோவிலில் அபிசேகம் செய்து வழிபடுவார்கள்.

நேற்று வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி பிரதமர் மோடி சுற்றுலாத்தலங்கள், மார்க்கெட்டுகளில் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் கூடுவது குறித்து தனது கவலையை தெரிவித்திருந்தார்.

இந்தியா மருத்துவ சங்க தலைவர் 3-ம் அலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com