

சென்னை:
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது? என்ற தலைப்பில் மாலைமலர் இணையதளம் வாசகர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தியது. இதன் முடிவுகளை பார்ப்போம்.
இந்த கருத்துக் கணிப்பில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் 5138 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு ஆதரவாக 45.20 சதவீத வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 2532 வாக்குகளும் (22.27 சதவீதம்), டி.டி.வி. தினகரன் 2309 வாக்குகளும் (20.31 சதவீதம்), கலைக்கோட்டுதயம் 1045 வாக்குகளும் (9.19 சதவீதம்), கரு.நாகராஜன் 344 வாக்குகளும் (3.03 சதவீதம்) பெற்றுள்ளனர்.
நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.