மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்பதால் அறிக்கை கேட்கிறார் -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கு

ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கை கேட்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், கொரோனா கால கொள்முதல் குறித்து தனி வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

முதல்வர் செயல் நாயகன் என்பதால் செயல்படுகிறார், ஸ்டாலின் அறிக்கை நாயகன் என்பதால் அறிக்கை கேட்கிறார். ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கை கேட்கிறார். 

தேர்தலில் தேசிய கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் மாநில கட்சிகள்தான் கூட்டணி தலைமையை ஏற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com