திருப்பூரில் நாளை நடக்க இருந்த மாரத்தான் 21-ந்தேதிக்கு மாற்றம்

போட்டியில்கலந்து கொள்பவர்களுக்கான முன்பதிவு கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்தது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அனுப்பர்பாளையம்

திருப்பூர் திருமுருகன்பூண்டி சுகன் சுகா மருத்துவமனை சார்பில் நாளை 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)குழந்தைகள் தினத்தையொட்டி ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்து கொள்ளும் சுகன் சுகா மாரத்தான் 2021 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த போட்டியில்கலந்து கொள்பவர்களுக்கான முன்பதிவும் கடந்த 1 மாதமாக நடைபெற்று வந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆர்வமுடன் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு சுகன் சுகா மருத்துவமனை வளாகத்தில் தொடங்க இருந்த மாரத்தான் வரும் 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும்என்றும் போட்டி ஒருங்கிணைப்பாளரான சுகன் சுகா மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com