பல ஆட்டங்களில் பவர்பிளேயில் சிறப்பாக செயல்படவில்லை - அஸ்வின்

பல ஆட்டங்களில் தோற்றதற்கு பவர் பிளேயில் சிறப்பாக செயல்படாததே காரணம் என தோல்வி குறித்து அஸ்வின் கூறியுள்ளார். #IPL2019 #Ashwin
பல ஆட்டங்களில் பவர்பிளேயில் சிறப்பாக செயல்படவில்லை - அஸ்வின்
Published on

மொகாலி:

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியிடம் பஞ்சாப் மீண்டும் தோற்றது.

மொகாலியில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது.

சாம்கரண் 24 பந்தில் 55 ரன்னும் ‘(7பவுண்டரி, 2 சிக்சர்), நிக்கோலஸ் பூரண் 27 பந்தில் 48 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), அகர்வால் 26 பந்தில் 36 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், குர்னே, ரஸல், ரானா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உஸ்மன் ஹில் 49 பந்தில் 65 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ் லின் 22 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது‌ஷமி அஸ்வின், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

கொல்கத்தா அணி பெற்ற 6-வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி 12 புள்ளியுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடித்து வருகிறது.

நேற்றைய போட்டியின் போது தினேஷ் கார்த்திக் சக வீரர்களிடம் ஆடுகளத்தில் கோபப்பட்டார் வெற்றிக்கு பிறகு அவர் கூறியதாவது:-

கடந்த சில தினங்களாக எங்கள் அணியில் சுமூகமான சூழல் இல்லை. பந்து வீச்சாளர்கள், பீல்டர்கள் செயல்பாட்டில் திருப்தி இல்லை. பவுலர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி கிடைத்தது. நாங்கள் இன்னும் ஒரு நாள் போராட வேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8-வது தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணியின் ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பு மங்கி உள்ளது. வெளியேற்றப்படும் நிலையில் உள்ளது.

தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது-

இந்த ஆடுகளத்தில் நாங்கள் நிர்ணயித்த இலக்கு (184 ரன்) போதுமானதுதான் என்று கருதுகிறேன். ஏனென்றால் இதே மைதானத்தில் இதற்கு முன்பு 175-180 ரன்கள் வரை எடுத்து வெற்றி பெற்று இருக்கிறேன்.

கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்த இளம் வீரர் உஸ்மான் ஹில் கடைசிவரை நின்று அபாரமாக ஆடி எங்கள் அணியை வீழ்த்தினார்.

நாங்கள் இந்தப் போட்டித் தொடரில் பல ஆட்டங்களில் தோற்றதற்கு பவர் பிளேயில் சிறப்பாக செயல்படாததே காரணம். பவர் பிளே ஓவர்களில் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் நாங்கள் கண்டிப்பாக நன்றாக செயல்படவில்லை.

வீரர்களின் காயமும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. முஜிபுர் ரகுமான், வருண் காயம் அடைந்தனர். அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சிறந்தவர்களாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #IPL2019 #Ashwin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com