போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தம் - கொல்கத்தாவில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தின் போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #WestBengalPolice #CBIteamdetain
போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தம் - கொல்கத்தாவில் பரபரப்பு
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று மாலை சென்றனர்.

ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, கமிஷனர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போலீஸ் கமிஷனர் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ நுழையக் கூடாது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #WestBengalPolice #CBIteamdetain

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com