பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் இந்திய கொடி அசைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் இந்திய தேசிய கொடி அசைக்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்
Published on

பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மாபெரும் கூட்டத்தில் இந்திய கொடி அசைக்கப்பட்ட போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் கராச்சியில் இம்ரான் கானுக்கு எதிர்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், இந்திய தேசிய கொடியை யாரும் அசைக்கவில்லை என்பதும், அது கம்பத்தில் பறந்தது என தெரியவந்துள்ளது. இணைய தேடல்களில் இதே நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணகிடைத்தன. எனினும், இவை எதிலும் இந்திய கொடி இடம்பெறவில்லை.

அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. முன்னதாக இதே புகைப்படம் அக்டோபர் 19 தேதியில் தனியார் பத்திரிகை செய்தியில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. 

அந்த செய்தியில் எதிர்கட்சியை சேர்ந்த மரியம் பிரதமர் இம்ரானை சாடியது பற்றிய தகவல்களம் இடம்பெற்று இருந்தன. இதனால் பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய கொடி அசைக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com