

நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள முதலைமொழியில் உள்ள வயல்வெளியில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடப்பதாக நாசரேத் கிராம நிர்வாக அதிகாரி முத்தீஸ்வரி நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூரியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் கிடந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் ஒரு மஞ்சள் பையில் வேஷ்டி சட்டையும், மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் வைத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி கிணற்றில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. மேலும் இது தற்கொலையா? அல்லது கொலையா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.