

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தக்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 34) வேன் டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லையாம். இதனால் மன முடைந்த நடராசன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி நடராஜனின் அண்ணன் ரவி வலங்கைமான் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி நாகவன்னி (வயது 38). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த அவர் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் திருமக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.