தேனி அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

தேனி அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
Published on

தேனி:

தேனி அருகே சின்னமனூர் சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் எதுவும் அமைய வில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சுதாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே திருமண ஏக்கத்தில் இருந்த சுதாகரனுக்கு உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சுதாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com