கோபி அருகே திருமண ஏக்கத்தில் கூலி தொழிலாளி தற்கொலை

திருமண ஏக்கத்தில் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே திருமண ஏக்கத்தில் கூலி தொழிலாளி தற்கொலை
Published on

கோபி:

கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் கருப்ப மூப்பன். இறந்துவிட்டார். இவரது மனைவி தவமணி (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள். மூத்த மகனுக்கும், 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஆனால் இளைய மகனான செல்வராஜிக்கு (32) திருமணமாக வில்லை.

கூலி தொழிலாளியான செல்வராஜிக்கு குடிப்பழக்கம் இருந்தது. சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

மேலும் தனக்கு திருமணம் ஆகிவில்லையே என்று கூறி புலம்பியபடி இருந்தாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் செல்வராஜ் தனியாக இருந்தார்.

விரக்தியில் இருந்த அவர் வீட்டிலுள்ள பனைமர சட்டத்தில் லுங்கியால் தூக்குபோட்டுக்கொண்டார். அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டனர்.

சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com