இரணியல் அருகே திருமண ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

திருமண ஏக்கத்தில் ஜே.சி.பி. டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இரணியல் அருகே திருமண ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
Published on

இரணியல்:

இரணியல் அருகே கட்டி மாங்கோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 33). ஜே.சி.பி. டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் திருமண ஏக்கத்தில் அவர் அந்த பகுதியில் உள்ள தோப்பில் விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். அவரை ஆசரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுபற்றி இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி விசாரணை நடத்தி வருகிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com