ஏர் இந்தியா விமானி கேப்டன் டி.வி. சாத்தே உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: மகாராஷ்டிரா

விமான விபத்தில் உயிரிழந்த கேப்டன் டி.வி. சாத்தேவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்த விமானி சாத்தே
விமான விபத்தில் உயிரிழந்த விமானி சாத்தே
Published on

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர்.

விமானத்தை ஒட்டி வந்த டி.வி. சாத்தே முன்னாள் விமானப்படையை சேர்ந்த விமானி ஆவார். விங் கமாண்டராக பணிபுரிந்துளளார். மேலும், ஸ்வார்டு ஆஃப் ஹானர் விருதை பெற்றுள்ளார். அவருடைய வாழ்க்கை இளைய விமானிகளுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். முன்னாள் விங் கமாண்டர் உடல்  அடக்கம் மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் நடைபெறும் என அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com