ஆதாருடன் பான் கார்டு இணைக்க 2021 மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதார் கார்டு- பான் கார்டு
ஆதார் கார்டு- பான் கார்டு
Published on

புதுடெல்லி:

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பிற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, 2019-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com