சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி செயல்பட தவறி விட்டோம்: தோல்வி குறித்து மோர்கன் கருத்து

நாங்கள் இங்குள்ள (கார்டிப்) சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி எங்களை மாற்றிக்கொண்டு சரியாக செயல்பட தவறி விட்டோம் என்று தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கருத்து தெரிவித்துள்ளார்.
சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி செயல்பட தவறி விட்டோம்: தோல்வி குறித்து மோர்கன் கருத்து
Published on

கார்டிப் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்தை பதம் பார்த்து விட்டது. தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும் போது, ‘பர்மிங்காமில் விளையாடி விட்டு வந்த நாங்கள் இங்குள்ள (கார்டிப்) சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி எங்களை மாற்றிக்கொண்டு சரியாக செயல்பட தவறி விட்டோம். எல்லா சிறப்பும் பாகிஸ்தானையே சாரும். அவர்களின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. 250 முதல் 260 ரன்கள் எடுத்திருந்தால் சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com