மேற்குவங்காளம் இடைத்தேர்தல்: உலுபேரியாவில் 76 சதவீதம், நவ்பாராவில் 75 சதவீதம் வாக்குப்பதிவு

மேற்கு வங்காளம் மாநிலத்தின் உலுபேரியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 76 சதவீதம் வாக்குகளும், நவ்பாரா சட்டசபை தொகுதியில் 75 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மேற்குவங்காளம் இடைத்தேர்தல்: உலுபேரியாவில் 76 சதவீதம், நவ்பாராவில் 75 சதவீதம் வாக்குப்பதிவு
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் உலுபேரியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 76 சதவீதம் வாக்குகளும், நவ்பாரா சட்டசபை தொகுதியில் 75 சதவீத வாக்குகளும் பதிவாகின.

மேற்கு வங்காளம் மாநிலத்தின் உலுபேரியா தொகுதியில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த சுல்தான் அகமது எம்.பி. மற்றும் நவ்பாரா தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதுசூதன் கோஸ் ஆகியோர் காலமானதை தொடர்ந்தும் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

உலுபேரியா பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 76.7 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதேபோல், நவ்பாரா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும் பிப்ரவரி முதல் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com