தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீர் லாரிகள்
தண்ணீர் லாரிகள்
Published on

சென்னை:

அடிக்கடி தனியார் லாரிகளை பிடித்து உரிமையாளர்கள் மீது தண்ணீர் திருட்டு வழக்கு பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தடிநீர் எடுக்க குறிப்பிட்ட இடத்தில் அனுமதி வழங்க கோரியும் லாரிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 4500 தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com