ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையில் இருந்து கேரள மாநிலத்திற்கு இன்று தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
Published on

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின்கீழ் ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைக் காரணம் காட்டி உடனே ஆழியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீரைத் திறக்க வேண்டும் என கேரளா வலியுறுத்தியது. இதுதொடர்பாக கேரளப் பகுதியில் விவசாயிகளின் நடத்திய திடீர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது தமிழக வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கோவை மாவட்ட எல்லையோர பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டது.  

தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சிறுவாணி அணையில் இருந்து அவசரகால வழியில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். இதையடுத்து கேரள அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தண்ணீர் திறப்பதற்கு தமிழக விவசாயிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். கேரளாவுக்கு இவ்வளவு தண்ணீரை திறந்துவிடுவதால் தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com