களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது

சாரல் மழை பெய்யாததையடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. தற்போதுள்ள தண்ணீர் இன்னும் ஒரு சில வாரங்களில் வற்றி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது
Published on

களக்காடு:

களக்காடு தலையணையில் வறட்சியின் காரணமாக கடந்த 2 மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டது. இந்நிலையில் கடந்த வாரம் களக்காடு மலையில் சாரல் மழை பெய்ததால் வறண்டு கிடந்த தலையணையில் கடந்த 10-ந் தேதி முதல் தண்ணீர் வரத் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிய தொடங்கினர். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்றனர். தலையணையில் குடும்பத்தினர்களுடன் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகரித்ததால் தலையணை களை கட்டியது.

இந்நிலையில் களக்காடு மலையில் சாரல் மழை நின்றது. சாரல் மழை பெய்யாததையடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. தற்போதுள்ள தண்ணீர் இன்னும் ஒரு சில வாரங்களில் வற்றி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் கவலையடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com