முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்வதால் முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை
Published on

கூடலூர்:

பருவமழை ஏமாற்றியதால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் உயராமலேயே இருந்தது. இதனால் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் மானாவாரி பயிரிட ஆர்வம் காட்டினர். தற்போது தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.

மீண்டும் மழை பெய்ததால் நேற்று வரை 2678 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை அது 3009 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டமும் 130.95 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 1700 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 40.96 அடியாக உள்ளது. 1402 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 35.10 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 79.86 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 8.8, தேக்கடி 3.6, கூடலூர் 2, உத்தமபாளையம் 2, கொடைக்கானல் 1.2, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com