கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 728 கனஅடியாக அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 728 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
கெலவரப்பள்ளி அணை
கெலவரப்பள்ளி அணை
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 10-ந் தேதி 1,120 கனஅடி நீர்வரத்து இருந்தது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அடுத்தடுத்த நாட்களில் நீர்வரத்து படிப்படியாக சரிந்தது. கடந்த 16-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அணைக்கு 488 கனஅடி நீர்வரத்து இருந்தது.

நேற்று காலை அணைக்கு 648 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 728 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.66 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால் தென்பெண்ணை ஆற்றில் இன்று வினாடிக்கு, 728 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த 4 நாட்களாக அணைக்கு சீரான நீர்வரத்து இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்ததால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com