ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
ஒகேனக்கல்
ஒகேனக்கல்
Published on

ஒகேனக்கல்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று காலை 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலையும் தொடர்ந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் வெள்ள நீர் கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

நீர்வரத்து அதிகரிப்பால் தொடர்ந்து இன்று 61-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல இன்று 6-வது நாளாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றை பார்த்துவிட்டு செல்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com