ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து இரண்டரை மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செம்மண் நிறத்தில் வரும் தண்ணீர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செம்மண் நிறத்தில் வரும் தண்ணீர்.
Published on

ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து இரண்டரை மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. 3-வது நாளாக பரிசல் இயக்கவும், பரிசலில் சென்று மீன் பிடிக்கவும் தடை உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று வரை 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று 20 ஆயிரத்து 507 கனஅடியாக குறைந்தது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 15 ஆயிரத்து 707 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 4 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com