ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக சரிவு

ஒகேனக்கலுக்கு நேற்று 33 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒகேனக்கல்:

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 15 ஆயிரத்து 91 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் அதன் மொத்த கொள்ளளவான 124.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 747 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு 6 ஆயிரத்து 91 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடி ஆகும். அதில் நீர்மட்டம் 83.61 அடி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 551 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 9 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்திற்கு காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து 33 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 80-வது நாளாக அருவிகளில் குளிக்கவும், இன்று 11-வது நாளாக பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com