செங்கத்தில் குடிநீர் கேட்டு மறியல்

செங்கத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கத்தில் குடிநீர் கேட்டு மறியல்
Published on

செங்கம்:

செங்கம் கோலாந்தாங்கல் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர், இன்று காலை செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்ததும் விரைந்து வந்த செங்கம் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com