ப்ளோரென்ஸ் புயல் எதிரொலி - விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் எமர்ஜென்சி அறிவிப்பு

ப்ளோரென்ஸ் புயல் நெருங்கி வருவதை முன்னிட்டு விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் எமர்ஜென்சி நிலையை வாஷிங்டன் டிசி நகர மாகாண மேயர் அறிவித்துள்ளார். #HurricaneFlorence
ப்ளோரென்ஸ் புயல் எதிரொலி - விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் எமர்ஜென்சி அறிவிப்பு
Published on

வாஷிங்டன்:

பசிபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. அதையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் ப்ளோரென்ஸ் புயலை முன்னிட்டு எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வாஷிங்டன் டி.சி. மேயர் மூரியல் இ பவுசர் கூறுகையில், போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணி துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 

இன்னும் சில தினங்களில் எந்த நேரத்திலும் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அம்மாகாண கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரிடரின் போது அனைத்து வகையிலும் பாதுகாப்பு மற்றும் பெடரல் எமர்ஜென்சி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #HurricaneFlorence

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com