புதுவண்ணாரப்பேட்டையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

புதுவண்ணாரப்பேட்டையில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ராயபுரம்:

புதுவண்ணாரேட்டை காமராஜர் சாலையில் ஒரு அம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு பூசாரி மோகன் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

கோவில் வளாகத்தில் சில்லரை நாணயங்கள் சிதறி கிடந்தன. கொள்ளையன் உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு சில்லரையை வீசி சென்று உள்ளான். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வயரும், அபாய அலாரத்தின் வயரும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com