

கடந்த 4-ந்தேதி முதல் நேற்றுவரை (மே-7) இந்த பயிற்சி ஆட்டம் நான்கு நாட்கள் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நார்தம்ப்டன்ஷைர் 259 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 77 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
சதாப் கான்
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் ஆசாத் ஷபிக் (186 அவுட் இல்லை), ஹரிஸ் சோஹைல் (79), பாபர் ஆசம் (57) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 428 ரன்கள் குவித்தது.
169 ரன்கள் பினதங்கிய நிலையில் நார்தம்ப்டன்ஷைர் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரரும் கேப்டனும் ஆன நியூட்டன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். ரோசிங்டன் 42 ரன்னும், கோப் 52 ரன்னும் அடிக்க 301 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முகமது அப்பாஸ், சதாப் கான் தலா நான்னு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 132 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் பாகிஸ்தான் அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நார்தம்ப்டன்ஷைர்.
பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் அசார் அலி 10 ரன்னில் ரன்அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக் உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று இலக்கை எட்டியது. இமாம் உல் ஹக் 59 ரன்னும், ஹரிஸ் சோஹைல் 55 ரன்னும் எடுத்தனர்.