ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

ஸ்ரீவில்லிப்புத்தூர்:

ஸ்ரீருவில்லிபுத்தூர் அருகே உள்ள ஏ. ராமலிங்கபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் எல்லம்மாள் (வயசு 78). இவர் பழைய காரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை 6 மணி அளவில் வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டியுள்ள பாத்ரூமிற்கு சென்று விட்டு தண்ணீர் ஊற்றும்போது வீட்டின் பழைய சுவர் இடிந்து விழுந்தது. இதில் எல்லம்மாள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மூதாட்டி செல்லம்மாளின் உடலை மீட்டனர். வன்னியம்பட்டி போலீசார் இறந்த எல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com