100 நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி 205ல் இருந்து 224 ஆக உயர்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் தினக்கூலி தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. #MGNREGS #WageHike
100 நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி 205ல் இருந்து 224 ஆக உயர்வு
Published on

சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுள் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல், குளம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யப்பட்டு  வருகின்றன.

இந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 204 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நூறு நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி தமிழகத்தில் 205 ரூபாயில் இருந்து 224 ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்பட்டு வருகிறது. நூறு நாள் வேலை திட்டத்தில் தினக்கூலியாக ஒருவருக்கு 205 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் 205 ரூபாயில் இருந்து 224 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவித்துள்ளனர். #MGNREGS #WageHike #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com