சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. #ChhattisgarhAssemblyElection2018 #Chhattisgarh
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
Published on

ராய்ப்பூர்:

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அந்த வகையில், 18 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சத்தீஸ்கரில் இன்று (12-ந்தேதி) தொடங்கியது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே காலை முதல் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

படம் - நன்றி ANI

சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கரில் அடுத்த கட்டமாக எஞ்சிய பகுதிகளுக்கு வருகிற 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதுதவிர மத்திய பிரதேசம், மிசோரமில் வருகிற 28-ந் தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானாவில் டிசம்பர் 7-ந் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. #ChhattisgarhAssemblyElection2018 #Chhattisgarh #ChhattisgarhElections

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com