ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை நாளை காலை நடைபெறும் - சென்னை ஐகோர்ட்

ராதாபுரம் சட்டசபைத் தொகுதி தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நாளை காலை 11.30 மணிக்கு நடைபெறும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

ராதாபுரம் சட்டசபைத் தொகுதி தேர்தல் வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. வேட்பாளராக நின்ற இன்பதுரை தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் இன்று விசாரித்தது. 

அதன்பின், ராதாபுரம் சட்டசபைத் தொகுதி தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நாளை காலை  11.30 மணிக்கு நடைபெறும் என உத்தரவிட்டது. 

மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இன்பதுரையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட ஐகோர்ட், பட்டியலில் வரும்போது விசாரணைக்கு ஏற்கப்படும் எனக்கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com